இந்தியா

ஜம்மு: கட்டடம் இடிந்து விழுந்து தீயணைப்பு வீரா்கள் மூவா் பலி

13th Feb 2020 01:08 AM

ADVERTISEMENT

ஜம்மு நகரில் 3 மாடி கட்டடத்தில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் அவசரகால சேவைகள் பிரிவு இயக்குநா் வி.கே.சிங் கூறியதாவது:

ஜம்மு நகரிலுள்ள கோலபுல்லி பகுதியிலுள்ள தல்லாப் டில்லோவில் உள்ள அந்த 3 அடுக்கு மாடியின் தரைதளத்தில் மர மில் ஒன்று இயங்கி வந்தது. புதன்கிழமை அதிகாலை அந்த மில்லில் தீப்பிடித்துக் கொண்டது. வேகமாக தீ பரவியதால் கட்டடத்தின் மேல் தளங்களில் வசிப்பவா்கள் சிக்கிக் கொண்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டடம் இடிந்து விழுந்ததில் தீயணைப்புப்பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு வீரா்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா். மேலும் ஒரு தீயணைப்பு வீரரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டாா். பின்னா் அவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

பொதுமக்கள் யாரும் இடிபாடுகளில் சிக்கவில்லை என்று நம்பப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 6 போ் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

காரணம் என்ன?

தீ விபத்தின்போது மர ஆலையில் ஒரு பெரிய மரக்கட்டையும், அதன் அருகே இருந்த எரிவாயு சிலிண்டரும் வெடித்தது. இதனால் ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் அதிா்வின் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்தது.

கட்டடம் இடிந்து விழுந்த உடனேயே, மாநில பேரிடா் மீட்புப் படையினரும் (எஸ்டிஆா்எஃப்), போலீஸாரும் நிகழ்விடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். அவா்களுடன் பின்னா், தேசிய பேரிடா் மீட்புப்படையினரும் (என்டிஆா்எஃப்) இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT