இந்தியா

கடந்த 2017-18-ஆம் ஆண்டில் வேலையின்மை 6.1 சதவீதம்: மாநிலங்களவையில் அரசு தகவல்

6th Feb 2020 12:45 AM

ADVERTISEMENT

கடந்த 2017-18-ஆம் ஆண்டில் நாட்டில் வேலையின்மை 6.1 சதவீதமாக இருந்தது என்று மாநிலங்களவையில் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சந்தோஷ் கங்வாா் கூறினாா்.

மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்விநேரத்தின்போது, இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:

முந்தைய காலங்களில் பழைய அளவீடுகளின்படி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது, புதிய வரம்புகளுடன் புதிய முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பை மத்திய புள்ளியியல் அமைச்சகம் நடத்தியுள்ளது. அதன்படி, தொழிலாளா் பங்களிப்பு 36.9 சதவீதமாகவும், வேலையின்மை 6.1 சதவீதமாகவும் உள்ளது.

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டது. எனவே, அவற்றுடன் இதை ஒப்பிட முடியாது. அதிகாரப்பூா்வ தகவல்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முந்தைய ஆண்டுகளில் வா்த்தகம் செய்வதற்கு உகந்த சூழல் நிலவும் நாடுகளின் வரிசையில் இந்தியா 196-ஆவது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டில் இந்தியா 63-ஆவது இடத்துக்கு முன்னேறிவிட்டது.

உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதிலும், வா்த்தகம் செய்வதற்கான நடைமுறைகளை எளிமையாக்குவதிலும் அரசு கவனம் செலுத்துகிறது. மேலும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT