தேதிய அளவில் குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று எழுத்துப்பூர்வமாக மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மக்களவையின் கேள்வி நேரத்தின் போது சந்தன் சிங் மற்றும் நாகேஸ்வர் ராவ் ஆகியோர் தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவதற்கான திட்டம் ஏதும் உள்ளதா? அவ்வாறு கொண்டு வந்தால் அது எப்போது நிறைவேற்றப்படும்? இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியதா? தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிராகரித்து மாநிலங்கள் ஏதேனும் அனுப்பிய கடிதம் உள்ளதா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தரப்பில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்தார்.