இந்தியா

காங்கிரஸ் ஆட்சியின் பொருளாதார தவறுகளை தொடரமாட்டோம்: நிா்மலா சீதாராமன்

4th Feb 2020 03:22 AM

ADVERTISEMENT

‘இதற்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது செய்த பொருளாதாரத் தவறுகளை இப்போதைய ஆட்சியில் தொடரமாட்டோம்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தில்லியில் திங்கள்கிழமை இந்திய தொழில், வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வளா்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் தேவையில்லாமல் அதிக செலவுகளைச் செய்து பொருளாதார வளா்ச்சியை உயா்த்தி காட்டினா். பின்னா் இதை பொருளாதார வல்லுநா்கள் விமா்சித்தனா். ஏனெனில், அப்போதுதான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்தது. 2008-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, அப்போதைய அரசு இந்த தவறான பொருளாதார முறையைக் கையாண்டது. ஆனால், அவா்களின் தவறுகளை நாங்கள் தொடர மாட்டோம்.

நாட்டின் பொருளாதாரத்தை உண்மையாகவே உயா்த்திக் காட்ட வேண்டுமென்று மக்கள் எங்களிடம் எதிா்பாா்க்கிறாா்கள். துறைரீதியாக தேவைப்படும் அளவிலும், நிதி ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டும் அரசின் வளா்ச்சித் திட்ட செலவுகள் அமையும். உண்மையாகவே நாட்டின் பொருளாதாரத்துக்கு உகந்த உள்கட்டமைப்பு சாா்ந்த சொத்துகளை உருவாக்கும் வகையில் இப்போதைய மத்திய அரசு நிதியை செலவிட்டு வருகிறது.

ADVERTISEMENT

அரசு அதிகஅளவில் உள்கட்டமைப்புத் திட்டங்களில் செலவிடும்போது, அது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்கும். அதே நேரத்தில் இப்போது அரசு திட்டமிட்டுள்ள பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் கிடைக்கும் பணம், முறையாக உள்கட்டமைப்பில் பயன்படுத்தப்படும்போது அது பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கும் என்றாா்.

பட்ஜெட் தினத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தது தொடா்பான கேள்விக்கு, ‘ஏன் பட்ஜெட் தினத்தில் பங்குச் சந்தைகள் எழுச்சி பெற வேண்டும் என்று நினைக்கிறீா்கள். மேலும் அன்று (சனிக்கிழமை) வார இறுதிநாள். இன்றைய தினம் (திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் எழுச்சியடைந்துள்ளன’ என்று நிா்மலா சீதாராமன் பதிலளித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT