இந்தியா

காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதல்: இரு வீரர்கள் உள்பட 7 பேர் படுகாயம்

2nd Feb 2020 04:14 PM

ADVERTISEMENT

 

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில்  பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 7  பேர் படுகாயம் அடைந்தனர். 

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் லால் சவுக் நகருக்கு அருகே பிரதாப் பார்க் பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சில தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர். 

இந்தத் தாக்குதலில் இரு பாதுகாப்பு படை வீரர்களும், பொதுமக்களில் 5 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து, தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT