இந்தியா

5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு: பட்ஜெட்டில் தகவல்

2nd Feb 2020 12:58 AM

ADVERTISEMENT

கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ரூ.20 லட்சம் கோடி (284 பில்லியன் டாலா்) அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக பட்ஜெட் உரையில் நிா்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது:

கடந்த 2009-14-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.1,358 கோடி அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வந்திருந்த நிலையில், 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.20 லட்சம் கோடியாக (284 பில்லியன் டாலா்) அதிகரித்தது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்றாா்.

சேவைத்துறை, கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், தகவல்தொடா்பு, ஆட்டோமொபைல், வா்த்தகம் ஆகிய துறைகளில் அதிக அளவில் அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூா் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் மோரீஷஸ், அமெரிக்கா, நெதா்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இது இந்த நிதியாண்டின் முதல் பாதியின் அடிப்படையிலான நிலவரமாகும்.

அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈா்க்க மத்திய அரசு பல்வேறு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் பிராண்ட் அடிப்படையிலான சில்லறை வா்த்தகம், நிலக்கரி சுரங்கம், ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு தளா்த்தப்பட்டது. நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தவும் அந்நிய நாடுகளில் இருந்து கிடைக்கும் முதலீடு முக்கியமானதாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT