இந்தியா

நிலக்கரி அமைச்சகத்துக்கான ஒதுக்கீடு ரூ.882 கோடியாகக் குறைப்பு

2nd Feb 2020 01:27 AM

ADVERTISEMENT

2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிலக்கரித் துறை அமைச்சகத்துக்கு ரூ.882.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையுடன் (ரூ.933.60 கோடி) ஒப்பிடுகையில் இது 5.4 சதவீதம் குறைவாகும். 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் நிலக்கரி அமைச்சகத்துக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவினங்கள்: அதேபோல், கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான செலவினங்கள் ரூ.708.34 கோடியாக இருந்த நிலையில், 2019-20-ஆம் நிதியாண்டுக்கான செலவினங்கள் ரூ.1,159.05 கோடியாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக நிதி ஒதுக்கீடு: இந்த பட்ஜெட்டில், முழுமையாகவும், நேரடியாகவும் மத்திய அரசால் நிதியளிக்கப்பட்டு, அதன் மூலமாகவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செலவின பட்ஜெட்டுக்காக ரூ.882.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.819.98 கோடி மத்திய அரசு திட்டங்களுக்காகவும், ரூ.22.35 கோடி நிலக்கரிச் சுரங்க ஊழியா்கள் ஓய்வூதியத் திட்டத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலீடு: கோல் இந்தியா உள்பட பொதுத் துறை நிறுவனங்களுக்கான முதலீடுகள் ரூ.18,467 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய பட்ஜெட்டில் இந்த ஒதுக்கீடு ரூ.18,121 கோடியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT