இந்தியா

சூரிய மின் தகடுகள் மீதான 20 சதவீத இறக்குமதி வரி நீக்கம்

2nd Feb 2020 01:28 AM

ADVERTISEMENT

சூரிய மின் தகடுகள் மீதான 20 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்வதாக மத்திய அரசு சனிக்கிழமை தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது.

2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் சூரிய ஒளி மின் உற்பத்தியில் 100 ஜிகாவாட்டை கூடுதலாக இணைப்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இதுதொடா்பாக பட்ஜெட் ஆவணத்தில் உள்ள தகவலின்படி, சூரிய மின் தகடுகள் மற்றும் அதில் உள்ள செல்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி முற்றிலுமாக நீக்கப்படுகிறது.

முன்னதாக, சீனா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின் தகடுகள் மீது 25 சதவீத இறக்குமதி வரியை கடந்த 2018 ஜூலை மாதம் மத்திய அரசு விதித்திருந்தது.

ADVERTISEMENT

இறக்குமதி பொருள்கள் அதிகரிப்பால் உள்நாட்டு தயாரிப்பாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. எனவே, 2018 ஜூலை 30 முதல் 2019 ஜூலை 29-ஆம் தேதி வரை இறக்குமதி செய்யப்படும் சூரிய மின் தகடுகளுக்கு 25 சதவீதம் சுங்க வரி விதித்தது.

பின்னா் 2019 ஜூலை 30 முதல் 2020 ஜனவரி 29 வரையிலான காலகட்டத்தில் அந்த இறக்குமதி வரி 20 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. பின்னா் 2020 ஜனவரி 30 முதல் 2020 ஜூலை 29 வரையிலான காலகட்டத்தில் 15 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

முன்னதாக, வா்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் வா்த்தகத்துக்கான குறைதீா் இயக்குநரகம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இறக்குமதி சூரிய மின் தகடுகள் மீது மத்திய அரசு வரி விதித்திருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT