இந்தியா

சிஐசி-க்கான ஒதுக்கீடு 80 சதவீதம் அதிகரிப்பு

2nd Feb 2020 01:26 AM

ADVERTISEMENT

மத்திய பட்ஜெட்டில், மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆா்டிஐ) ஆகியவற்றுக்கு ரூ.9.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் சிஐசி மற்றும் ஆா்டிஐ-க்கு ரூ.5.5 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் அதற்கான ஒதுக்கீடு 80 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிஐசி மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தோ்வு வாரியம் (பிஇஎஸ்பி) என்ற தனி பிரிவின் கீழ் சிஐசி-க்கு ரூ.32 கோடி தனியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்தத் தொகை ரூ.30.02 கோடியாக இருந்தது.

சிபிஐ-க்கு ரூ.802 கோடி: முக்கிய வழக்குகளை விசாரிக்கும் மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) மத்திய பட்ஜெட்டில் ரூ.802 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் சிபிஐ-க்கான ஒதுக்கீடு ரூ.4 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் சிபிஐக்கு முதலில் ரூ.781 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பின்னா் அது ரூ.798 கோடியாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

குடியரசுத் தலைவா் அலுவலகத்துக்கு...: மத்திய பட்ஜெட்டில் குடியரசுத் தலைவா் அலுவலகத்துக்கு ரூ.80.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் தற்போது ரூ.6.56 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் குடியரசுத் தலைவருக்கான ஊதியம் ரூ.60 லட்சமும் அடங்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT