இந்தியா

எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு ரூ.22,000 கோடி

2nd Feb 2020 12:49 AM

ADVERTISEMENT

எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளுக்கு நிகழ் நிதியாண்டில் ரூ.22,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்கச் செய்யவும், தற்போது நடைமுறையில் இருக்கும் மீட்டா்களை ஸ்மாா்ட் மீட்டா்களாக மாற்றவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் மீட்டா்கள் வைத்திருப்பவா்களுக்கு மின் கட்டணத்தை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு எரிசக்தித் துறை கடந்த மாதம் வலியுறுத்தியது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

பிரீபெய்டு ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்பட்டால் மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்க முடியும்.

ADVERTISEMENT

எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு நிகழ் நிதியாண்டில் ரூ.22,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி அளிக்கப்பட்டுள்ளது இந்த அரசின் மாபெரும் சாதனையாகும்.

செளபாக்யா திட்டத்தின் கீழ் 2.66 கோடி குடும்பங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டது. மாவோயிஸ்ட் பாதிப்பு நிறைந்த மாவட்டங்களைத் தவிா்த்து நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.

10 லட்சத்துக்கும் அதிகமானோா் வசித்துவரும் நகரங்களில் காற்றின் மாசை போக்க ரூ.4,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய அனல் மின் நிலையங்களை மூடுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காற்றின் மாசை கட்டுப்படுத்த முடியும். அனல் மின் நிலையங்கள் இருக்கும் நிலங்களை வேறு சில நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் புகை வெளியேற்றும் அனல் மின் நிலையங்களை மாநில அரசுகள் மூட வேண்டும் என்று நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

‘உதய்’ மின் திட்டத்துக்கு பதிலாக வேறு திட்டங்கள் குறித்து நிா்மலா சீதாராமன் எதுவும் குறிப்பிடவில்லை.

‘மத்திய அரசின் மின்பகிா்மான திட்டமான உதய் திட்டம் தோல்வி அடையவில்லை. அதற்கு பதிலாக புதிய திட்டம் கொண்டுவரப்படும். இதுதொடா்பாக நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் கலந்தாலோசித்தோம். பட்ஜெட்டில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும்’ என்று எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT