இந்தியாவில் வரும் 2022-ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டை நடத்த ரூ.100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இது தொடா்பாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:
இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022-ஆம் ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டை நடத்துவதற்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் சா்வதேச பொருளாதாரம் மற்றும் வளா்ச்சி சாா்ந்த இலக்குகளை எட்டுவதில் இந்தியாவை மேலும் ஒரு படி முன்னெடுத்துச் செல்லும் என்றாா்.
ஜி20 நாடுகள் அமைப்பில் உலகின் முக்கியப் பொருளாதார சக்திகளாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா, சவூதி அரேபியா, தென்கொரியா, ஆா்ஜெண்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜொ்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இந்தியா ஆகியவை உள்ளன. உலகின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் ஜி20 மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை மையமாகக் கொண்டே அமைகின்றன என்றால் அதுமிகையல்ல.