புது தில்லி: அரசியல் மற்றும் நாட்டையே உலுக்கிய பல வழக்குகளில் விசாரணை நடத்தி வரும் மத்திய புலனாய்வு அமைப்புக்கு 2020 மத்திய பட்ஜெட்டில் ரூ.802 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவளத் துறைக்குள் வரும் மத்திய புலனாய்வு அமைப்பானது (சிபிஐ) பல்வேறு வழக்குகளின் விசாரணைக்காக வெளிநாடுகள் சென்று விசாரிக்கவும், வங்கி மோசடி மற்றும் சிறப்பு குற்ற வழக்குகளில் உள்நாட்டிலேயே பல இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்வதும் அவசியமாகிறது.
கடந்த ஆண்டு சிபிஐக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.798 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 4 கோடிகள் அதிகரித்து ரூ.802 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.