இந்தியா

2 மணி நேரம் 42 நிமிடங்கள் நிகழ்ந்த பட்ஜெட் உரை!

1st Feb 2020 03:06 PM

ADVERTISEMENT

 

பட்ஜெட் வரலாற்றிலேயே முதல்முறையாக, 2020-21 பட்ஜெட் உரை நீண்ட, நெடிய உரையாக அமைந்துள்ளது. இன்றைய தினம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றியுள்ளார். 

2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். காலை 11 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் உரை 2.45 மணியளவில் முடிவுற்றது. சரியாக 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

இதன் மூலமாக இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றிலேயே முதல்முறையாக நீண்ட உரையை வழங்கியுள்ளார். முன்னதாக, 2019-20ம் ஆண்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றினார். 

ADVERTISEMENT

2014ல் அமைச்சர் அருண் ஜேட்லி 2 மணி நேரம் 10 நிமிடங்களும், 2003ல் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 2 மணி நேரம் 13 நிமிடங்களும் பட்ஜெட் உரையாற்றியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT