இந்தியா

பட்ஜெட் 2020: வேளாண் துறைக்கு ரூ. 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு!

1st Feb 2020 11:47 AM

ADVERTISEMENT

2020-21 மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வாசித்து வருகிறார். 

விவசாயத்துறையில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

► விவசாயத்துறைக்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு 

ADVERTISEMENT

► நவீன தொழில்நுட்பத்தினால் வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை பெருக்க 16 அம்ச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

► 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் அமைக்க நிதியுதவி வழங்கப்படும். 

► வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு.

► கிராமப்புற பெண்களின் வளர்ச்சிக்காக 'தானிய லட்சுமி' எனும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. 

► வேளாண் விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்வதற்காக வேளாண் உதான் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

► 'கிருஷி உடான்' எனும் திட்டம் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் துறையை மேம்படுத்த உதவும். 

► விவசாய விளை பொருட்களை அனுப்பும் போக்குவரத்துக்கான செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

► அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்தும் வகையில் திட்டம்.

► பால், பழங்கள், காய்கறிகளை கொண்டு செல்ல, குளிர் சாதன வசதியுடன் கூடிய கிசான் ரயில் இயக்கம். 

► 2022-23ம் ஆண்டிற்குள் 200 லட்சம் டன் அளவிற்கு மீன் உணவுகள் சார்ந்த உற்பத்திக்கு இலக்கு

► சாகர் மித்ரா திட்டத்தின் மூலமாக மீனவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். 

► 2021ம் ஆண்டிற்குள் 101 டான் பால் உற்பத்திக்கு இலக்கு. 

► வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT