15வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் எல்.ஐ.சியில் மத்திய அரசின் வசம் உள்ள பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
இதில் முக்கிய அறிவிப்பாக, மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
15வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் எல்.ஐ.சி.யில் மத்திய அரசு வசம் உள்ள பங்குகள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும். பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள் மூலம் மத்திய அரசுக்கு நிதி திரட்டப்படும் என்று கூறினார்.
இதேபோன்று, ஐடிபிஐ-யில் உள்ள அரசின் பங்குகளும் விற்கப்படும் என்றும் அறிவித்தார்.