இந்தியா

வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு: நிதியமைச்சர்

1st Feb 2020 01:02 PM

ADVERTISEMENT

 

வங்கிகளில் பணம் டெபாசிட் மீதான காப்பீடு தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2020 - 21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வாசித்து வருகிறார். 

 • கூட்டுறவு வங்கி விதிகளில் பெருமளவு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
   
 • வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
   
 • வங்கிகளில் பணம் டெபாசிட் காப்பீடு தொகை ரூ..5 லட்சமாக உயர்த்தப்படும்.
   
 • வங்கிகள் திவாலானால் வைப்புத் தொகையில் இருந்து அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
   
 • மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT