இந்தியா

தந்தையே மகனுக்கு எமனாகிவிட்ட சோகம்

1st Feb 2020 03:26 PM

ADVERTISEMENT

 

சதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தக்தாக்வா கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலி, மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த குழந்தைகள் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் சடலங்கள் போலீஸார் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

பண்டிகை முடிந்து, சரஸ்வதி சிலைகளை நீரில் கரைத்த பின்னர், விழாவில் பயன்படுத்தப்பட்ட ஒலிபெறுக்கியை திருப்பி அனுப்பிய பின்னர் டிராக்டர் மீண்டும் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

திரும்பி வரும் வழியில், எதிர் முனையிலிருந்து வந்த சைக்கிள் மோதலைச் தவிர்க்க முயன்ற போது ஓட்டுநர் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்தார்.

டிராக்டர் திடீரென்று கவிழ்ந்து, மூன்று குழந்தைகளை பலி வாங்கியது. மேலும் டிராக்டரில் அமர்ந்திருந்த 5 பேர் காயமடைந்தனர்.

இறந்த குழந்தைகளில் டிராக்டர் டிரைவரின் மகனும் உள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT