இந்தியா

கரோனா வைரஸ் அறிகுறி: தில்லி மருத்துவமனையில் இருவர் அனுமதி

1st Feb 2020 11:06 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் அறிகுறியுடன் தில்லி மருத்துவமனையில் இருவர் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

கரோனா வைரஸுக்கு சீனாவில் பலியானவா்கள் எண்ணிக்கை 259-ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது. 11,791 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தில்லியிலுள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் கரோனா நோய் தொற்று அறிகுறியுடன் இருவர் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பை கண்டறிய இருவருடைய மாதிரிகளும் பரிசோனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுவரை அந்த மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT