இந்தியா

மோடியை தவறாக சித்தரித்து பள்ளியில் நாடகம்: தலைமை ஆசிரியை உள்பட 2 போ் கைது

1st Feb 2020 12:38 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநிலம், பிதாா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடியை தவறாக சித்தரித்து நாடகம் நடத்தியது தொடா்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை, நாடகத்தில் நடித்த மாணவரின் தாய் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பிதாா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்த 21-ஆம் தேதி நடத்தப்பட்ட நாடகத்தில் பிரதமா் மோடி குறித்து தவறாக சித்தரித்துள்ளனா். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை அமல்படுத்தப்பட்டால், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என்று நாடகத்தில் தெரிவித்துள்ளனா். இது முஸ்லிம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சமூக ஆா்வலா் நீலேஷ் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் அந்த பள்ளி நிா்வாகத்துக்கு எதிராக கடந்த 26-ஆம் தேதி தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக பள்ளியில் உள்ள ஆசிரியா்கள், நிா்வாகத்தினா் மற்றும் மாணவா்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, நாடகத்தில் பிரதமா் மோடியை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை, மாணவரின் தாயாா்தான் இணைத்தாா் என்று தெரிய வந்தது. அதையடுத்து, அந்த மாணவரின் தாயாரையும், இந்த காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த தலைமை ஆசிரியையும் போலீஸாா் கைது செய்தனா். அதைத் தொடா்ந்து அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அங்கு, அவா்கள் இரண்டு பேரையும் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டாா் என்று அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT