2020 - 21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து, அதனை வாசித்து வருகிறார்.
அப்போது. விவசாயம் குறித்த அறிவிப்புகளை மத்திய பட்ஜெட்டில் வாசித்து வந்த நிர்மலா சீதாராமன் ஆத்திச்சூடியை குறிப்பிட்டுப் பேசினார்.
அவர் கூறியதாவது, மூன்று மூன்று வார்த்தைகளில் பல முக்கிய விஷயங்களை ஔவையார் அழகுத் தமிழில் ஆத்திச்சூடியில் சொல்லியிருக்கிறார்.
அதில் குறிப்பாக 'பூமி திருத்தி உண்' என்ற மூன்று வார்த்தைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஔவையார் கூறியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.
ADVERTISEMENT
ஏற்கனவே காஷ்மீரி மொழியில் சில குறிப்புகளை எடுத்துரைத்த நிர்மலா சீதாராமன், ஆத்திச்சூடியை குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.