இந்தியா

புத்தாண்டு: குடியரசுத் தலைவர் வாழ்த்து

31st Dec 2020 07:46 PM

ADVERTISEMENT

புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் எனது மனப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு புத்தாண்டும் புதிய தொடக்கத்துக்கான வாய்ப்பை வழங்குவதோடு, தனிநபர் மற்றும் கூட்டு மேம்பாட்டுக்கான நமது உறுதியை வலுப்படுத்துகிறது.

கரோனா காரணமாக உருவாகியுள்ள சூழ்நிலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னேறுவதற்கான வாய்ப்பாகும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது நம்பிக்கையை வலுப்படுத்தும் கலாச்சார மதிப்புகளை வலுப்படுத்துவதற்கான நேரமிது.

ADVERTISEMENT

2021-ஆம் ஆண்டு துவங்கும் இந்த வேளையில், அன்பு, கருணையுடன் கூடிய, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்துகிற அனைவருக்குமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.

நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்தோடும் இருந்து, நமது நாட்டின் வளர்ச்சிக்கான பொது இலக்கை எட்டுவதற்கு புதிய உற்சாகத்துடன் முன்னேற வேண்டும்," என்று தமது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

Tags : new year
ADVERTISEMENT
ADVERTISEMENT