இந்தியா

ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமா் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறாா்

31st Dec 2020 08:55 AM

ADVERTISEMENT

புதுதில்லி: குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு  வியாழக்கிழமை வீடியோ காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ. 1,195 கோடி  செலவில் ராஜ்கோட் நகரின் புறநகர் பகுதியான காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த வளாகத்திற்கு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். 

ராஜ்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில்  குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் விஜய் ரூபானி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். 

ADVERTISEMENT

ராஜ்கோட் நகரின் புறநகர் பகுதியான காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1,195 கோடி செலவில் இந்த வளாகம் அமைக்கப்பட உள்ளது. இது 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிநவீன 750 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 125 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 60 நர்சிங் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குஜராத்தில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எய்ம்ஸ் மருத்துவமனையின் 9 கட்டடங்களின் வரைபடங்களுக்கு தற்காலிக ஒப்புதல் கிடைத்துள்ளது. 

Tags : AIIMS Rajkot
ADVERTISEMENT
ADVERTISEMENT