இந்தியா

‘மேற்குவங்கத்தில் இரவு நேர பொதுமுடக்கம் இல்லை’: தலைமைச் செயலர் அறிவிப்பு

31st Dec 2020 04:35 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று குறைந்து வருவதால் புத்தாண்டு தினத்தையொட்டி இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்படத் தேவை எழவில்லை என மேற்குவங்க மாநில தலைமைச் செயலர்  அலபன் பாண்டியோபாத்யாய் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு தினத்தையொட்டி இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கூட்டம் கூடுவதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு வெளியிடப் போவதில்லை என மேற்குவங்க மாநில தலைமைச் செயலர் அலபன் பாண்டியோபாத்பாய் தெரிவித்தார்.

பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக்கோரிய அவர் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT

Tags : west bengal
ADVERTISEMENT
ADVERTISEMENT