இந்தியா

புத்தாண்டு கொண்டாட்டம்: கோவாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

31st Dec 2020 11:41 AM

ADVERTISEMENT

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கோவாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காலை முதலே புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்று நாட்டின் ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் புதுச்சேரி, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. புத்தாண்டையொட்டி கோவாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்று (டிச.31) காலை முதல் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இது குறித்து பேசிய கோவா துணை முதல்வர் மனோகர் அஜ்கோங்கர், ''காலை முதல் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்களின் வருகை மேலும் அதிகரிக்கும். 

சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் கட்டாயம் முக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்'' என்று கூறினார்.

Tags : new year
ADVERTISEMENT
ADVERTISEMENT