இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 2020-ல் 225 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

31st Dec 2020 05:13 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் 2020-ஆம் ஆண்டில் மட்டும் எல்லை தாண்டி வந்த 225 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுள்ளதாக காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எல்லைப் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள், ஊடுருவல், பொதுமக்கள் மீதான தாக்குதல் ஆகியவை 2020-ஆம் ஆண்டில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து காவல்துறை இயகுநர் தில்பாக் சிங் கூறியதாவது, ஜம்மு-காஷ்மீரில் திட்டமிட்டு 100 வெற்றிகரமான தாக்குதல்கள் நிகழ்ந்தப்பட்டுள்ளன. 

90 திட்டமிட்ட தாக்குதல்கள் காஷ்மீரிலும், 13 தாக்குதல்கள் ஜம்முவிலும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்கள் மற்றும் பதிலடி தாக்குதல்களில் இந்த ஆண்டு 225 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் 47 தீவிரவாதிகள் பல்வேறு அமைப்புகளின் உயர்மட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

ADVERTISEMENT

இதேபோன்று ஜம்மு-காஷ்மீரில் 16 காவலர்களும், 44 பாதுகாப்புப்படை வீரர்களும் தீவிரவாதிகளுடனான தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாகக் கூறினார்.

காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களின் செயல்பாடுகளால் பதுங்கியிருந்த பல தீவிரவாதிகள் கண்டறிந்து அழிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT