இந்தியா

பாஜக எம்.பி. மனோஜ் திவாரிக்கு பெண் குழந்தை; சுட்டுரையில் பகிர்ந்த புகைப்படம்

31st Dec 2020 01:26 PM

ADVERTISEMENT


நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரிக்கு புதன்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது.

மனோஜ் திவாரி தனது சுட்டுரைப் பக்கத்தில், தனது குடும்பத்தில் புதிய வரவு வந்திருப்பதாகக் கூறி நல்ல செய்தியை பகிர்ந்திருப்பதோடு, குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும்ட பகிர்ந்துள்ளார்.

 

அவர் பதிவிட்டுள்ள சுட்டுரையில், எனது வீட்டுக்கு புதிய தேவதை ஒருவர் வந்துள்ளார், எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஜெய் ஜெகதாம்பே என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. தலைப்புச் செய்தியானவர்கள்..

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான மனோஜ் திவாரிக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகள் உள்ளார்.

தில்லி பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்தவர். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவரும் மனோஜ் திவாரி, மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு மிகவும் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
 

Tags : bjp
ADVERTISEMENT
ADVERTISEMENT