இந்தியா

வருமான வரித் தாக்கல்: ஜனவரி 10 வரை அவகாசம் நீட்டிப்பு

30th Dec 2020 07:06 PM

ADVERTISEMENT


2019-20ம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்ய ஜனவரி 10 வரை அவகாசம் நீட்டிப்பதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் தற்போது 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கணக்குளைத் தணிக்கை செய்ய மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 31 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வருமான வரித் தாக்கல் செய்வதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : ITR
ADVERTISEMENT
ADVERTISEMENT