இந்தியா

தெலங்கானாவில் மேலும் 474 பேருக்கு கரோனா: 3 பேர் பலி

30th Dec 2020 10:58 AM

ADVERTISEMENT

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 474 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில், கடந்த 24 மணி நேர அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது, 

தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி 474 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 2.86 லட்சமாக அதிகரித்துள்ளது. 

மேலும், நோய் தொற்றுக்கு புதிதாக மூவர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,538 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

தொற்று பாதித்த 5,878 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நேற்று 45,590 சோதனைகள் மேற்கொண்டு நிலையில் இதுவரை 68.39 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

இதையடுத்து குணமடைந்தோரின் விகிதம் 97.40 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT