மகாராஷ்டிரத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டனில் உருவாகிய புதிய வகை கரோனா வைரஸ் தொற்று நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு வருகிறது. பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புதியவகை கரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய அவர்களது மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இதனால் அடுத்த ஆண்டும் கரோனா பரவல் இருக்கலாம் என்று வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் மீண்டும் கரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இதனால் மேலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ஆம் தேதி வரை தொடரும்.
கடந்த சில மாதங்களாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் கோயில்களில் வழிபாடு நடத்துவதற்கும் அனுமதிக்கப்பட்டது.
மேலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு சில பகுதிகளில் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.