மேற்கு வங்கத்தில் புதிதாக ஒருவருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு லண்டனிலிருந்து திரும்பிய இளைஞர் ஒருவருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்ட நபர் கொல்கத்தா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்ட நபருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மரபணு பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவருக்கு வந்த முடிவில் புதிய வகை கரோனா உள்ளது உறுதியாகியுள்ளது.
இளைஞருடன் லண்டனிலிருந்து வந்த மேலும் 7 பேரின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.