இந்தியா

நாட்டில் மேலும் 18,732 பேருக்குத் தொற்று; 279 பேர் பலி

27th Dec 2020 11:37 AM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டில் கரோனா ஒருநாள் பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 

நாட்டில் புதிதாக 18,732 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,01,87,850 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றால் மேலும் 279 போ் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,47,622 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் இருந்து 97,61,538 போ் விடுபட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 21,430 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி 2,78,690 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி இதுவரை 16,81,02,657 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,43,368 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT