இந்தியா

மணிப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்

27th Dec 2020 09:15 PM

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று துவக்கி வைத்தார். 
இம்பாலில் மின்னணு அலுவலகம் மற்றும் தௌபால் அணைத் திட்டத்தை காணொலி வாயிலாக அவர் தொடங்கி வைத்தார். மேலும் சுராசந்த்புர் மருத்துவக்கல்லூரி, மந்த்ரிபுக்ரியில் தொழில்நுட்ப - சிறப்புப் பொருளாதார மண்டலம், புதுதில்லியின் துவாரகாவில் மணிப்பூர் பவன், இம்பாலில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் உள்ளிட்ட ஏழு வளர்ச்சித் திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். 
வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கான அமைச்சர்  ஜிதேந்திர சிங், மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்ப - சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் ஒரே நாளில் துவங்கப்படுவதன் மூலம் வடகிழக்கு மாகாண வளர்ச்சியின் முக்கிய மைல்கல்லாக இவை அமைகிறது. 
வடகிழக்கு மாகாணத்தின் வளர்ச்சியில் மோடி உறுதியாக இருப்பதாகவும், இந்தப் பகுதியின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்றார். 

Tags : Manipur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT