இந்தியா

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

27th Dec 2020 08:24 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாடுமுழுவதும் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வருடத் துவக்கத்தில் நாடுமுழுவதும் கரோனா தொற்று பரவிய போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக,  ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை முதன்முறையாக மார்ச்-30 அன்று நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்பின் ஜூன்-9 மற்றும் ஆகஸ்ட்-24 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது,

ADVERTISEMENT

இந்நிலையில் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க நான்காவது முறையாக மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் 31-ஆம் தேதியோடு ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT