இந்தியா

‘விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்’: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

27th Dec 2020 06:34 PM

ADVERTISEMENT

விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 32 நாள்களாக தில்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேளாண் சட்டங்களின் பலன்களை உணர குறைந்தது 2 வருடங்களாவது காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இமாச்சல்பிரதேச அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வேளாண் பொருள்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையை பாதுகாப்பதில் நரேந்திரமோடி உறுதியாக உள்ளதாகவும், வேளாண் சட்டங்களை இயற்றுவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் எனவும் தெரிவித்தார்.

மேலும் விவசாயத்தைப் பற்றி கூட தெரியாதவர்கள் அப்பாவி விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என ராஜ்நாத் சிங் விமர்சனம் செய்தார்.

ADVERTISEMENT

Tags : Rajnath singh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT