இந்தியா

தில்லியில் இன்று புதிதாக 757 பேருக்கு கரோனா

27th Dec 2020 09:23 PM

ADVERTISEMENT

தில்லியில் இன்று புதிதாக 757 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தில்லியில் கடந்த சில தினங்களாக தினசரி கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதுகுறித்து தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று, புதிதாக 757 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. 
இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,22,851- ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 75,210 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் தலைநகரில் இன்று 16 போ் உயிரிழந்தனா். 
இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,453-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 939 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,05,685-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,713 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 
இவா்களில், 3,335 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 16,246 படுக்கைகள் காலியாக உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT