இந்தியா

போராட்டத்திற்கு மத்தியில் விவசாயம்: வெங்காய விளைச்சலில் ஈடுபடும் விவசாயிகள்

27th Dec 2020 11:25 AM

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தின் மத்தியில் தங்களது அன்றாட உணவுத் தேவைக்காக வெங்காய விளைச்சலில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 32 நாள்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள் தோல்விற்ற நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தில்லியின் புராரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அருகில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளனர். தங்களது போராட்டம் மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ள விவசாயிகள் அப்பகுதியில் வெங்காயம் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

"ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் வெங்காயம் பயிரிட்டால் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்பதால் அதைப் பற்றி யோசித்தோம். புராரி நிலத்தில் அதிக பயிர்களை வளர்ப்போம்" என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Farmers protest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT