இந்தியா

மேற்கு வங்கம்: திரிணமூல் காங்கிரஸிலிருந்து 4-வது எம்எல்ஏ ராஜிநாமா

18th Dec 2020 09:56 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எல்எல்ஏ பதவி விலகியுள்ளார். 
மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 
இந்த நிலையில் மேற்கு வங்க அரசியலில் முக்கிய திருப்பமாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர். கடந்த இரு தினங்களில் மட்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ளனர். இது மம்தா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 
இதனிடையே மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எல்எல்ஏ தற்போது பதவி விலகியுள்ளார். உத்தர் கந்தி தொகுதி எம்எல்ஏ பனாஸ்ரீ மைதி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 
மேலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் கூறியுள்ளார். இவர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. 
கடந்த இரு தினங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு எம்எல்ஏ ராஜிநாமா செய்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : west bengal
ADVERTISEMENT
ADVERTISEMENT