இந்தியா

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்: அதிகாரிகள் ஆலோசனை

18th Dec 2020 06:30 PM

ADVERTISEMENT


மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு முதல்பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆட்சியைக் கைப்பற்ற வியூகங்களை அமைக்கும் விதமாக பாஜக தலைவர்கள் மேற்குவங்கத்திற்கு அடிக்கடி சென்றுவருகின்றனர்.

இதனிடையே திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகின்றனர். இதனைக் கண்டித்து திரிணமூல் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆரிப் அஃதாப் தலைமையில் மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

சிலிகுரியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் துணை ஆணையர் சுதீப் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுத்தேர்தல் நடத்துவதற்கான தயார் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags : west bengal
ADVERTISEMENT
ADVERTISEMENT