இந்தியா

எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜிநாமா: கட்சிக் கூட்டத்திற்கு மம்தா அழைப்பு

18th Dec 2020 01:30 PM

ADVERTISEMENT

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்ததை சூழ்நிலையில் இன்று கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது. 

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் மோதல் இருப்பது சாதாரணமானதுதான். ஆனால், கடந்த இரு தினங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ளது மம்தா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

பந்தபேஷ்வர் தொகுதி எம்.எல்.ஏ ஜிதேந்திர திவாரி, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான சுவேந்து அதிகாரி, இன்று பாராக்பூர் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தா என கடந்த இரு தினங்களில் மூன்று பேர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இவர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. 

இந்த சூழ்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. மம்தா பானர்ஜி, கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

Tags : west bengal
ADVERTISEMENT
ADVERTISEMENT