இந்தியா

பிகாரில் 2021 ஜனவரி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

18th Dec 2020 09:21 PM

ADVERTISEMENT

பிகாரில் 2021ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில தலைமை செயலர் தீபக் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுவதும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக பிகாரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது தள்ளிப்போனது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 10 மற்றும் 12 வகுப்புகளும், கல்லூரிகளின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் இதர வகுப்புகளைத் தொடங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

Tags : Bihar
ADVERTISEMENT
ADVERTISEMENT