இந்தியா

‘விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேளுங்கள்’: மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

18th Dec 2020 04:57 PM

ADVERTISEMENT

வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேளுங்கள் என காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து மத்திய பிரதேச விவசாயிகளிடையே பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் எனவும், குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

இதுகுறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, “வழக்கமான அவரின் பழக்கத்தின்படி அவர் இறங்கி வரவில்லை. விவசாயிகளின் கோரிக்கையைக் கேளுங்கள். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள்” என தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Rahul gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT