இந்தியா

காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்தல் அதிகரிக்கலாம்: ஆய்வில் தகவல்

18th Dec 2020 07:28 PM

ADVERTISEMENT

அதிகரித்து வரும் காலநிலை மாற்ற நெருக்கடிகளால் 2050ஆம் ஆண்டளவில் தெற்காசிய மக்களில் 6.2 கோடி பேர் தங்களின் வாழிடங்களில் இருந்து புலம்பெயரலாம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் திடீர் மழைப்பொழிவு, அதிகரிக்கும் புயல்கள், உயரும் வெப்பநிலை போன்ற சூழலியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சூழலியல் பாதிப்புகளால் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க மக்கள் பிற பகுதிகளுக்கு புலம்பெயர்தலை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் நடப்பாண்டு 1.4 கோடி மக்கள் பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என உலக வங்கியின் கிரவுண்ட்ஸ்வெல் அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான பிரையன் ஜோன்ஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்ற பாதிப்புகளால் நீர் மற்றும் விவசாயத்தில் ஏற்படும் சிக்கல்களினால் மக்கள் புலம்பெயர்தலை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

"காலநிலை தாக்கங்களினால், தெற்காசியாவில் உள்ள நாடுகள் 2050ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2% ஐ இழக்கக்கூடும் எனவும் கிட்டத்தட்ட 6.2 கோடி பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து புலம்பெயர்வார்கள் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புலம்பெயர்தலுக்காக மோசமான கடன் வலையில் மக்கள் சிக்க வாய்ப்புள்ள அதேவேளையில் குறைந்த ஊதியத்திற்கு நகரங்களில் அவர்கள் பணியாற்ற வேண்டிய கட்டாய சூழலில் சிக்குவார்கள் எனவும் இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT