இந்தியா

ஹத்ராஸ் வழக்கு: நான்கு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

18th Dec 2020 04:02 PM

ADVERTISEMENT

 

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில்  பட்டியலினத்தைச் சோ்ந்த 19-வயதுப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பலியான சம்பவத்தில் நான்கு பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட சந்தீப், லவ்குஷ், ரவி, ராமு ஆகிய நான்கு பேர் மீதும், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக சிபிஐ குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. இது குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினத்தைச் சோ்ந்த 19-வயதுப் பெண் சிகிச்சை பலனின்றி தில்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

செப்டம்பா் 14-ஆம் தேதி அந்தப் பெண்ணை நான்கு இளைஞா்கள் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். நான்கு பேரில் ஒருவா் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தபோது அந்தப் பெண் தனது நாக்கை கடித்ததால் துண்டானது. பின்னா் அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அலிகரில் உள்ள மருத்துவமனையில் கை, கால்கள் செயலிழந்து நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தாா்.

தன்னை சந்தீப், ராமு, லவ்குஷ், ரவி ஆகிய நால்வா் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்தாா். இதில் சந்தீப் அன்றைய தினமே கைது செய்யப்பட்டாா். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அந்தப் பெண் தில்லி சப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். இந்நிலையில் அவா் செப்டம்பர் 30-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை, குடும்பத்தினர் இல்லாமல், காவல்துறையினரே தகனம் செய்தனர். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நான்கு இளைஞா்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Tags : CBI Hathras
ADVERTISEMENT
ADVERTISEMENT