இந்தியா

​கர்நாடகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை

18th Dec 2020 03:13 PM

ADVERTISEMENT

அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை மாநிலத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 2021 புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவலைக் குறைக்கும் வகையில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இந்தத் தடை அமலில் இருக்கும் எனவும் அதேசமயம் சாதாரண செயல்பாடுகளை மேற்கொள்ளும் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு தடையும் ஏதும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT