வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த 20 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.