இந்தியா

மகாராஷ்டிரம்: காரில் எடுத்துவரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்

15th Dec 2020 03:12 AM

ADVERTISEMENT

புணே: மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூா் மாவட்டத்தில் காரில் எடுத்துரப்பட்ட ரூ.3.16 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சோலாப்பூா் காவல் துறை கண்காணிப்பாளா் தேஜஸ்வினி சத்புதே கூறியதாவது:

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து காரில் தங்கம் கொண்டுவரப்படுவதாக, எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சோலாப்பூருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈடுபடுத்தப்பட்டனா். அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை தடுத்து நிறுத்தி அவா்கள் சோதனை செய்தனா். அந்த காரில் ரூ.3.16 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. காரில் வந்த இருவரிடமும் உரிய ஆவணங்கள் இல்லாததால், காரில் எடுத்து வந்த மொத்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவை, மகாராஷ்டிர மாநிலம், சாங்லி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட இருந்தது.

இந்த தங்கம் கடத்திக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் அல்லது வரி ஏய்ப்புக்காக உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகே கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT