இந்தியா

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைப்போம்: விவசாயத் தலைவர்கள்

15th Dec 2020 09:20 PM

ADVERTISEMENT


மத்திய அரசை வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைப்போம் என போராட்டம் நடத்தி வரும் விவசாயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தில்லி சிங்கு எல்லையில் விவசாயத் தலைவர் ஜக்ஜீத் தல்லேவால் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

"வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மாட்டோம் என அரசு தெரிவிக்கிறது. சட்டங்களைத் திரும்பப் பெற வைப்போம் என நாங்கள் கூறுகிறோம். என்ன நடந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டத்தை போராட்டம் எட்டியுள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தையிலிருந்து ஓடவில்லை. ஆனால், அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உறுதியான திட்டத்துடன் முன்வர வேண்டும்."

மற்றொரு விவசாயத் தலைவர் தெரிவிக்கையில், "போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்காக நாட்டின் அனைத்து கிராமங்கள், தாசில்தார் தலைமையகங்களில் டிசம்பர் 20-ம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மரியாதை செலுத்தப்படும்" என்றார்.

ADVERTISEMENT

முன்னதாக, போராட்டம் நடத்தி வரு விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT