இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை

15th Dec 2020 04:12 PM

ADVERTISEMENT

 

பலியா: உத்தரப்பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில் சமூக விரோதிகளால் அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில் பிம்புரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லோஹ்தா பச்தரா கிராமத்தில் பாபா சாஹேப் அம்பேத்கர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிலையை திங்கள் இரவு சமூக விரோதிகள் சிலர் இழிவுபடுத்தியுள்ளனர். இதன்காரணமாக அந்த கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.

சிலை அவமதிக்கபட்ட சம்பவம் குறித்து செவ்வாய் காலை ஊர் மக்கள் தங்களுக்கு தகவல் தந்ததாக பிம்புரா காவல் நிலைய அதிகாரி ஷிவ் மிலான் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றும், அங்கு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும், விரைவில் அங்கு புதிய சிலை நிறுவப்படும் என்றும் வட்ட காவல்துறை அதிகாரி கே.பி.சிங் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT