இந்தியா

சாபஹார் துறைமுகத்தை கூட்டாக பயன்படுத்த இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் பேச்சுவார்த்தை

15th Dec 2020 06:45 AM

ADVERTISEMENT


புது தில்லி: ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தை கூட்டாக பயன்படுத்துவது தொடர்பாக இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே முதல்முறையாக திங்கள்கிழமை காணொலி முறையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: 
பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சாபஹார் துறைமுகத்தை வணிகம் மற்றும் போக்குவரத்துக்காக எவ்வாறு ஒன்றிணைந்து பயன்படுத்துவது என்பது குறித்து 3 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசித்தனர். அந்த துறைமுகம் மூலமாக பிராந்தியங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவது பற்றியும் அவர்கள் விவாதித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. 

ஈரானில் உள்ள சிஸ்தான்- பலுசிஸ்தான் மாகாணத்தில் சாபஹார் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில் 3 நாடுகளும் இணைந்து அந்த துறைமுகத்தை அமைத்து வருகின்றன. இந்த துறைமுகத்தை சரக்குப் போக்குவரத்துக்கு பயன்படுத்த உஸ்பெகிஸ்தான் முன்வந்துள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT