இந்தியா

நாட்டில் புதிதாக 27,071 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 336 பேர் பலி

14th Dec 2020 10:51 AM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27,071 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 336 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,071 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,84,100 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு மேலும் 336 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு  1,43,355 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 30,695 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 93,88,159 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய நிலவரப்படி, 3,52,586 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேபோன்று நாட்டில் டிசம்பா் 13-ஆம் தேதி வரை 15,45,66,990 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நேற்று மட்டும் 8,55,157 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல் தெரிவித்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT